--- --:--:-- --

காவல் நிலையம் எதிரில் கத்திகளுடன் மோதிக் கொண்ட இருவர்

14

சென்னை அம்பத்தூர் காவல் நிலையம் எதிரே இருவர் ஒருவருக்கு ஒருவர் கத்தியால் வெட்டிக் கொல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன. பெயிண்டிங் வேலை செய்துவரும் ராஜன் மற்றும் கோதண்டராமர் என்ற இருவருக்கு பணியாளர் தங்கும் விடுதி ஒன்றில் தங்குவது தொடர்பாக தகராறு ஏற்பட்டது.

 

இந்த நிலையில் ராஜனின் மனைவி குறித்து கோதண்டராமன் தவறாக பேசியதாக கூறப்படுகிறது. இதனால் ராஜன் ஆத்திரத்தில் இருந்த நிலையில் இன்று காலை இருவரும் அம்பத்தூர் காவல் நிலையம் அருகே சாலையில் கத்திகளுடன் மோதிக்கொண்டனர்.

 

கோதண்டராமன் சரமாரியாக கத்தியால் குத்தியதில் படுகாயமடைந்த ராஜன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வரும் போலீசார் கைது செய்துள்ளனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon