--- --:--:-- --

திருவாடானை அருகே 25 லட்சம் கடல் பல்லியை கைப்பற்றிய மர்ம நபர்கள்யார் ?

16

திருவாடானை அருகே தடைசெய்யப்பட்ட கடல் பல்லிகள் 50 கிலோவை மர்ம நபர்கள் பதுக்கி வைத்திருந்ததை திருச்சி சுங்கத் துறையினர் கைப்பற்றி விசாரணை செய்து வருகிறார்கள்.

 

ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை தாலுகா தொண்டி அருகே வீர சங்கிலிமடம் கடற்கரைப்பகுதியில் தடை செய்யப்பட்ட கடல் பல்லிகள் பதுக்கி வைத்திருப்பதாக திருச்சி சுங்கத் துறையினருக்கு தகவல் கிடைத்தது. இந்த தகவலின் அடிப்படையில் இந்த பகுதியில் 50 கிலோ கடல் பல்லிகள் 5 மூட்டைகளில் பதுக்கி வைத்திருந்ததை கைப்பற்றினர்.

இந்த பல்லிகளின் சர்வதேச மதிப்பு ரூபாய் 25 லட்சம் இருக்குமென தெரிவித்தனர். இதை பதுக்கி மர்ம மனிதர்கள் யார் என்பது குறித்து தீவிர விசாரணை செய்து வருகிறார்கள். இந்த பகுதியில் கடல் அட்டைகள், கடல் பல்லிகள், கடல் குதிரைகள் மற்றும் தடை செய்யப்பட்ட பொருட்கள் அடிக்கடி கைப்பற்றப்படுவது வழக்கமான ஒன்றாகிவிட்டது. எனவே உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்தார்கள்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon