--- --:--:-- --

மாஸ்டர் படப்பிடிப்பில் இருந்து நடிகர் விஜயை விசாரணைக்கு அழைத்து சென்ற வருமான வரித்துறை

3

மாஸ்டர் படப்பிடிப்பு தளத்தில் கேரவனில் வைத்து நடிகர் விஜயிடம் வருமானவரித்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வந்தனர். பின்னர் விஜயை அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டு வந்துள்ளனர். விஜய் நடித்த பிகில் படத்தை தயாரித்த ஏஜிஎஸ் நிறுவனத்தில் ஐடி சோதனை நடைபெறும் நிலையில் விஜயிடமும் விசாரணை நடைபெற்று வருகிறது.

 

ஏஜிஎஸ் நிறுவனத்துக்கு சொந்தமான 20 இடங்களில் காலை முதல் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். பிகில் படத்தை தயாரித்த ஏஜிஎஸ் நிறுவனத்திலும் கடன் கொடுத்த அன்புச்செழியன் அலுவலகத்திலும் சோதனை நடைபெற்று வருகிறது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon