ராமர் கோயில் கட்டுவதற்கான அறக்கட்டளைக்கு அனுமதி
அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்காக அறக்கட்டளை அமைக்க மத்திய அமைச்சரவை அனுமதி அளித்துள்ளதாக பிரதமர் மோடி மக்களவையில் கூறியுள்ளார்.
அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவது தொடர்பான ராமஜென்ம பூமி வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வு, ராமர் கோவில் கட்ட வேண்டும் என்று உத்தரவிட்டது. இதற்கான அறக்கட்டளை மூன்று மாதங்களில் அமைக்கப்பட வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பித்து இருந்தது.
இந்த தீர்ப்பை எதிர்த்து தொடரப்பட்ட மேல்முறையீட்டு மனுக்கள் அனைத்தும் தள்ளுபடி செய்யப்பட்டன. இந்நிலையில் ராமர் கோவில் கட்டுவது தொடர்பாக மக்களவையில் பேசிய பிரதமர் அயோத்தியில் ராமர் கோவில் கட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக கூறினார்.
ராமர் கோவில் கட்டுவதற்கான அறக்கட்டளை அமைக்க மத்திய அமைச்சரவை அனுமதி அளித்து இருப்பதாகவும் அந்த அறக்கட்டளைக்கு ஸ்ரீ ராம ஜென்ம பூமி தீர்த்த சேத்ரா என பெயரிடப்பட்டுள்ளது எனவும் பிரதமர் மோடி கூறினார். அமைச்சரவை கூட்டம் முடிந்தவுடன் மக்களவைக்கு வந்த பிரதமர் மோடி இந்த அறிவிப்பை வெளியிட்டார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




