திருப்பதி கோயில் மீது பறந்த விமானம் : அதிகாரிகள் விசாரணை
திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு மேலே விமானம் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் விமானம் ஒன்று பறந்து சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது. திருப்பதி கோவிலுக்கு மேலே கடந்த இரண்டு நாட்களாக சிறிய ரக விமானம் ஒன்று பறந்து சென்று வருவதாக தேவஸ்தான அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.
இதுகுறித்து சென்னையில் உள்ள விமான கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது. விசாரணையில் கோவிலுக்கு மேலே பறந்து சென்றது சர்வே ஆப் இந்தியாவின் விமானம் என தெரியவந்தது. எனினும் விமானங்கள் பறக்க தடை இருக்கும் போது எவ்வாறு விமானம் பறந்தது என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




