--- --:--:-- --

பெரியார் விவகாரத்தில் ரஜினியின் கருத்து நியாயமானது

6

பெரியார் குறித்த விவகாரத்தில் நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்த கருத்துக்கள் நியாயமானதுதான் என்று பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார். சென்னையில் ராஜேந்திர பாலாஜி அவரது இல்லத்தில் சிக்கீம் கால்நடை பராமரிப்பு மற்றும் வேளாண் அமைச்சர் ஷர்மா சந்தித்தார்.

 

அதன் பின் செய்தியாளர்களிடம் பேசிய ராஜேந்திரபாலாஜி சிக்கிமில் பால் பதப்படுத்தும் பண்ணை அமைப்பது குறித்து இருவரும் ஆலோசித்ததாகக் கூறினார்.

முஸ்லிம்களுக்கு ஒரு பிரச்சினை என்றால் குரல் கொடுக்கும் திமுக இந்துக்களுக்கு பிரச்சனை வரும் போது குரல் கொடுப்பதில்லை என்று குற்றம் சாட்டிய அவர் பெரியார் விவகாரத்தில் ரஜினிக்கு துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம், அமைச்சர் ஜெயக்குமார் கண்டனம் தெரிவிக்கவில்லை என்றும் கூறினார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon