--- --:--:-- --

வியாசர்பாடியில் ஒரே வீட்டில் கணவன் – மனைவி உள்ளிட்ட 3 பேர் சடலமாக மீட்பு

5

சென்னை வியாசர்பாடியில் ஒரே வீட்டில் கணவன், மனைவி உள்ளிட்ட 3 பேர் சடலமாக மீட்கப்பட்டது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

 

வியாசர்பாடி எருக்கஞ்சேரியை சேர்ந்த கரிகாலன், முனியம்மாள் தம்பதி தங்கள் மகளின் திருமணத்திற்காக பெற்ற ஏழு லட்சம் ரூபாய் கடனை அடைக்க கடந்த மாதம் தங்கள் வீட்டை விற்றதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த அவரது மகன் ஹரிஹரன் வீட்டை விட்டு வெளியேறியதாகவும் கூறப்படுகின்றது.

 

சொந்த வீட்டை காலி செய்து வாடகை வீட்டுக்கு செல்ல இன்னும் 4 நாட்களே உள்ள நிலையில், கரிகாலன், முனியம்மாள் ஆகியோர் வீட்டில் அறையில் தூக்கிட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். முனியம்மாளின் சகோதரரான மனவளர்ச்சி குன்றிய ஆறுமுகம் என்பவரும் உணவில் விஷம் கலந்து கொடுக்கப்பட்ட நிலையில் இறந்து கிடந்தார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon