--- --:--:-- --

12 அடி நீள மலைப்பாம்புக்கு ஆரத்தி எடுத்து வணங்கிய பொதுமக்கள்

3

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே பிடிபட்ட 12 அடி நீள மலைப்பாம்புக்கு ஆரத்தி எடுத்து திலகம் இட்டு பொதுமக்கள் வழிபாடு நடத்தினர். மலையடிவார கிராமமான மாராபட்டுவில் விவசாயி கிணற்றில் ராட்சத மலைப்பாம்பு ஒன்று நீந்தி கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் வனத்துறைக்கு தகவல் அளித்தனர்.

 

இதையடுத்து அங்கு வந்த வனத்துறை அதிகாரிகள் மலைப்பாம்பை பிடித்து பைக்குள் அடைத்து ஆம்பூர் காட்டுக்குள் பாதுகாப்பாக விட்டனர். ஆம்பூர் வனச்சரகத்தில் பிடிபட்ட மலைப்பாம்புகளில் இதுதான் மிகப் பெரியது என்று வனக்காப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon