முக்கோண வடிவில் நாடாளுமன்றத்தின் புதிய வளாகம்?
நாடாளுமன்றத்தின் புதிய வளாகம் 1,350 உறுப்பினர்கள் அமரும் வகையில் முக்கோண வடிவில் கட்டப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன. 2024 ஆம் ஆண்டிற்குள் புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை கட்டி முடிக்க ஒப்பந்தம் செய்துள்ள சென்ட்ரல் விசா நிறுவனம் திட்டமிட்டிருப்பதாக தெரிகிறது.
900 உறுப்பினர்கள் முதல் ஆயிரத்து 350 உறுப்பினர்கள் வரை அமரும் வகையில் நாடாளுமன்ற மையப்பகுதியும் வடிவமைக்கப்படுகிறது. அந்தத் திட்டத்தில் சவுத் பிளாக்கின் பின்புற பகுதிக்குள் பிரதமரின் இல்லத்தை இடம் மாற்றுவது, நார்த் பிளாக்கின் பின்புறம் பகுதிக்கு குடியரசு துணைத் தலைவரின் இல்லத்தை இடம் மாற்றுவது தொடர்பாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அகமதாபாத்தை சேர்ந்த எஸ்சிபி என்ற வரைகலை நிறுவனம் புதிய நாடாளுமன்ற வளாகத்தில் முக்கோண வடிவில் வடிவமைத்துள்ளது. தற்போது எம்பிக்கள் அமரும் வரிசைகளில் முதல் இரண்டு வரிசைகளில் மட்டுமே மேசைகள் இருப்பதாகவும் புதிய வளாகத்தில் அனைத்து வரிசைகளிலும் மேசைகள் இருக்கும் வகையில் உருவாக்கப்பட்டு இருப்பதாக தகவல்கள் கூறுகின்றன.





