வில்சன் கொலை குறித்து தகவல் கொடுத்தால் ரூ.7 லட்சம் வெகுமதி
சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் வில்சன் கொலை குறித்து தகவல் கொடுத்தால் ஏழு லட்சம் ரூபாய் வெகுமதி வழங்கப்படும் என்று கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அறிவித்திருக்கிறார்.
வில்சன் படுகொலை சம்பவம் தொடர்பான ஆலோசனை கூட்டம் காவல் கண்காணிப்பாளர் தலைமையில் களியக்காவிளை காவல் நிலையத்தில் நடைபெற்றது. அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் இச்சம்பவத்தில் தொடர்புடைய அப்துல்சமீம், தொஃபிக் ஆகிய இரண்டு பயங்கரவாதிகள் குறித்த தகவலை தெரிவித்தால் 7 லட்சம் ரூபாய் வெகுமதி வழங்கப்படும் என்றார்.
இதற்காக 24 மணி நேரமும் செயல்படும் வாட்ஸ் அப் செயலி எண் 7 0 1 0 3 6 3 1 7 3 மற்றும் கட்டுப்பாட்டு அறையின் இரண்டு 2 2 0 1 6 7 இருப்பதாக அவர் கூறினார்.





