போட்டுபாத்துக்கலாம் வர்றியா? நர்சை தரக்குறைவாக பேசிய மருத்துவர்
புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அரசு மருத்துவமனையில் பணியாற்றும் மருத்துவர் தன்னுடன் பணிபுரியும் செவிலியரை தகாத வார்த்தையில் பேசும் வீடியோ வெளியாகியுள்ளது .
அன்றைய தினம் மருத்துவர் தமிழ்மணி மது போதையில் இருந்ததாகவும் பணிச்சுமை காரணமாக மன ரீதியில் பாதிக்கப்பட்டுள்ளதால் செவிலியரிடம் தவறாக பேசியதாகவும் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன .இச்சம்பவம் குறித்து முதல் கட்ட விசாரணை நடைபெற்று வருவதாகவும் மருத்துவர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மாவட்ட சுகாதாரத்துறை இணை இயக்குனர் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.





