--- --:--:-- --

டிக்டாக்கில் அவதூறாகப் பேசிய பெண்மணி கைது : யார் அந்தப் பெண்மணி?

23

மீண்டும் டிக் டாக் சர்ச்சை வெடித்திருக்கிறது. டிக் டாக்கில் அவதூறாக பேசிய பெண்மணி கைது செய்யப்பட்டிருக்கிறார். நாகப்பட்டினத்தில் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு அம்பேத்கர் சிலை உடைத்து சேதப்படுத்தப்பட்டது.

 

இது குறித்து பலரும் சமூக வலைதளங்களில் தங்களது கருத்துக்களை பதிவு செய்தனர். இந்த நிலையில் தூத்துக்குடியிலிருந்து பெண்மணி ஒருவர் அம்பேத்கர் சிலை உடைப்பு சம்பவம் குறித்து டிக் டாக் வெளியிட்டிருந்தார். பட்டியல் இன மக்களை பற்றி அதில் அவதூறாகவும் பதிவு செய்திருந்தார்.

 

இந்தப் பெண்மணியின் இந்த டிக்டாக்வீடியோ அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் அந்த பெண்மணி மீது நடவடிக்கை எடுக்கும்படி புகார் அளிக்கப்பட்டுள்ளது.

 

இதனையடுத்து வடபாகம் காவல்நிலைய போலீசார் நடத்திய விசாரணையில் அம்பேத்கர் சிலை உடைப்பு குறித்து செல் போனில் டிக் டாக் வெளியிட்டு அவதூறு பரப்பிய பெண்மணி தூத்துக்குடி பூபாளபுரத்தை சேர்ந்த சுதா என்பது தெரியவந்தது.

 

இதையடுத்து சுதாவை காவல்துறையினர் கைது செய்த நிலையில் அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். அம்பேத்கர் சிலை உடைப்பு குறித்து டிக்டாக் வெளியிட்டு அவதூறாக பேசிய பெண்மணி காவல்துறையிடம் சிக்கிய சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon