விமான நிலையம் அருகே திடீரென தீப்பற்றிய கார்!

சென்னை விமான நிலையம் எதிரே உள்ள மேம்பாலத்தில் கார் திடீரென தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. சேலத்தில் இருந்து 4 பேர் காரில் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு வந்து கொண்டிருந்தனர்.

 

விமான நிலையம் எதிரே உள்ள மேம்பாலத்தில் வந்தபோது திடீரென காரின் முன் பகுதியில் இருந்து புகை வர தொடங்கியது. உடனடியாக காரில் இருந்த 4 பேரும் கீழே இறங்கிவிட்டனர். சிறிது நேரத்தில் கார் தீப்பிடித்து முழுமையாக எரிந்து சேதமடைந்தது. பேட்டரியல் ஏற்பட்ட மின் கசிவே தீ விபத்திற்கு காரணம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.


Leave a Reply