சலுகையோ சலுகை…! ரேசனில் சீனி மட்டும் வாங்குபவர்களுக்கு இனி அரிசியும் உண்டு!!
சர்க்கரை மட்டுமே வாங்கும் ரேஷன் கார்டு வைத்திருப்பவர்கள் அதனை அரிசி குடும்ப அட்டைகளாக இனி மாற்றிக் கொள்ளலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
தமிழகத்தில் குடும்ப அட்டை வைத்திருப்பவர்களுக்கு ரேசனில் பொருட்கள் வழங்குவதில் வித்தியாசம் உள்ளது. இலவச அரிசி, சர்க்கரை பருப்பு உள்ளிட்ட அனைத்து பொருட்களும் வாங்கும் ரேசன் கார்டுதாரர்கள், சீனி மட்டுமே வாங்கும் ரேசன் கார்டுதாரர்களுக்கு கூடுதலாக சீனி, ரேசன் கார்டு மட்டும் போதும்;பொருட்கள் எதுவும் வேண்டாம் என்னும் கெளரவ ரேசன் கார்டுதாரர்கள் என வகைப்படுத்தப்பட்டுள்ளனர்.
கடந்தாண்டு பொங்கலுக்கு 1000 ரூபாய் பொங்கல் பரிசை தமிழக அரசு வழங்கியது. அப்போது அரிசி வாங்கும் ரேசன் கார்டு தாரர்களுக்கு மட்டுமே இந்தப் பரிசு என அறிவிக்கப்பட்டதால், மற்ற கார்டுதாரர்கள் ஏமாற்றம் அடைய குழப்பம் ஏற்பட்டது. பிரச்னை நீதிமன்றத்திற்கும் சென்றது. கடைசியில் அனைத்து கார்டுதாரர்களுக்கும் சைலண்டாக பரிசு வழங்கி சமாளித்தது தமிழக அரசு .
உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பு வெளியாக உள்ள நிலையில், வரும் பொங்கலுக்கு பரிசாக ரூ 2 ஆயிரம் முதல் 3 ஆயிரம் வரை வழங்க தமிழக அரசுத் தரப்பில் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளது. அதற்கு முன்னதாக சீனி மட்டும் வாங்கும் கார்டுதாரர்களையும், அரிசி வாங்கும் கார்டுதாரர்களாக மாற்ற முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது.
அதன்படி சீனி மட்டும் வாங்கும் ரேசன் கார்டுதாரர்கள் அரிசி குடும்ப அட்டைதாரர்களாக மாற்றிக் கொள்ளலாம் என தமிழக உணவு வழங்கல் துறை சார்பில் இன்று அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதன்படி இன்று முதல் இன்று முதல் நவ.26 வரை https://t.co/gwYFPOhLAt என்ற இணையதளத்திலும், அந்தந்த தாலுகாவில் உள்ள வட்டவழங்கல். அதிகாரியிடமும் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப் பட்டுள்ளது.தமிழகத்தில் சீனி மட்டும் வாங்கும் ரேசன் கார்டுதாரர்கள் சுமார் 10 லட்சத்து 90 ஆயிரம் பேர் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




