--- --:--:-- --

தண்ணீரில் இறங்கி கடினத்துடன் பள்ளிக்கு செல்லும் குழந்தைகள்!

6

சிவகங்கை அருகே கண்மாயை கடந்து செல்ல உரிய பாலம் இல்லாததால் மாணவர்கள் தண்ணீரில் இறங்கி பள்ளிக்கு செல்லும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் அருகே உள்ள ஆலங்குடியில் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.

 

இந்த கிராமத்தை சுற்றி மூன்று கண்மாய்கள் உள்ளன. இந்நிலையில் கடந்த சில நாட்களாக பெய்த கனமழையால் கண்மாயில் அதிகளவு நீர் தேங்கியுள்ளது. கண்மாயை கடக்க பாலம் கட்டப்படாததால் மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் தண்ணீரில் இறங்கி செல்லும் அவலநிலை ஏற்பட்டுள்ளது.

 

65 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் பாலம் அமைக்க முடிவு செய்யப்பட்டும் இதுவரை பணிகள் தொடங்கப்படவில்லை. கண்மாயை கடந்து செல்ல அரசு விரைந்து பாலம் கட்டித்தர வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon