--- --:--:-- --

திருப்பரங்குன்றம் மலையில் 24 மணி நேரமும் தீபம் ஏற்றுவது மரபல்ல – உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு பதில்

11

திருப்பரங்குன்றம் மலையில் உள்ள தூணில் 24 மணி நேரமும் தீபம் ஏற்றுவது மரபு கிடையாது என்றும், கார்த்திகை தீபத் திருநாளன்று மலை முழுவதும் தீபம் ஏற்ற வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்க முடியாது என்றும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

 

 

திருப்பரங்குன்றம் மலையில் தீபம் ஏற்றுவது தொடர்பாக மதுரையைச் சேர்ந்த ஒருவர் உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில், தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்துள்ளது. அதில், மலையில் உள்ள தூணில் 24 மணி நேரமும் தீபம் ஏற்றுவது நடைமுறையில் உள்ள மரபு அல்ல என்றும், மலை முழுவதும் தீபம் ஏற்ற வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்க முடியாது என்றும் அரசு தனது நிலைப்பாட்டைத் தெரிவித்துள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon