--- --:--:-- --

கள்ளக்குறிச்சி விவகாரம் – பாதிக்கப்பட்டவர்களின் பக்கமே விசிக நிற்கும் – அமைச்சர் வன்னி அரசு

6

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்கு சட்டமன்ற உறுப்பினர் தவறான குறுஞ்செய்தி அனுப்பியதாக சொல்லப்படும் விவகாரத்தில் பாதிக்கப்பட்டவர்கள் பக்கமே விசிக நிற்கும் என அமைச்சர் வன்னியரசு தெரிவித்துள்ளார்.கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டையில் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற குழந்தைகள் தின விழா அமைச்சர் வன்னி அரசு பங்கேற்றார். இதனைத் தொடர்ந்து, ஊ.கீரனூர் ஏரியில் நடைபெற்ற பண விதைகள் நடும் பணியை துவக்கி வைத்தார். இதன் பிறகு அமைச்சர் வன்னியரசு, செய்தியாளர்களைச் சந்தித்தார்.

 

அமைச்சராகவும், கள்ளக்குறிச்சி பொறுப்பு அமைச்சராகவும் இருக்கும் வன்னி அரசிடம், அம்மாவட்ட ஆட்சியருக்கு தவெக எம்.எல்.ஏ. அருள் விக்னேஷ் சர்ச்சைக்குரிய வகையில் குறுஞ்செய்தி அனுப்பியதாக எழுந்துள்ள புகார் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதில் அளித்த அமைச்சர் வன்னி அரசு, “கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்கு சட்டமன்ற உறுப்பினர் அருள் விக்னேஷ் குறுஞ்செய்தி அனுப்பிய விவகாரத்தில், விசிகவை பொறுத்தவரை எப்பொழுதுமே பெண்கள் பாதுகாப்பு மற்றும் பெண்கள் நலனை விரும்புகின்ற கட்சி இந்த விவகாரத்தில் நாங்கள் பாதிக்கப்பட்டவர் பக்கமே நிற்போம்.

 

 

இதுவரை எனக்கு இதுகுறித்து எந்தத் தகவலும் தெரியாது. நான் இன்றுதான் மாவட்ட நிகழ்ச்சிக்கு வந்துள்ளேன். ஒருவேளை அது குறித்து புகார் வந்தால் தமிழக முதல்வரோ அல்லது செயலகத்தில் இருந்து உத்தரவு வந்தால் அதனை விசாரித்து அதன் பின்பு அவர்களுக்கு தகவல் தெரிவித்துவிட்டு நான் இது பற்றி கூறுகிறேன்” எனத் தெரிவித்தார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon