இலங்கையில் நவ. 16இல் அதிபர் தேர்தல் – இன்றுடன் ஓய்கிறது பிரசாரம்
இலங்கையில், அதிபர் தேர்தலுக்கான பிரசாரம் இன்று நள்ளிரவுடன் நிறைவு பெறுகிறது.
அண்டை நாடான இலங்கையில், வரும் 16 ஆம் தேதி அதிபர் தேர்தல் நடக்கிறது. இதில், ஆளும் ஐக்கிய தேசிய கட்சி வேட்பாளராக சஜித் பிரேமதாசா, எதிர்க்கட்சி வேட்பாளராக இலங்கை பொதுஜன பெரமுனா சார்பில், முன்னாள் அதிபர் ராஜபக்சேவின் சகோதரர் கோத்தபய ராஜபக்சே உட்பட, 35 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.
வாக்குப்பதிவுக்கு நாள் நெருங்கிய நிலையில், கடந்த சில நாட்களாக இலங்கையில் தீவிர வாக்குசேகரிப்பில் வேட்பாளர்கள் ஈடுபட்டு வந்தனர். அனல் பறக்கும் இந்த பிரசாரம், இன்றிரவு 12 மணியுடன் நிறைவு பெறுகிறது. வரும் 16ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




