“எதிர்க்கும் அரசியல் பிரபலங்களின் பிள்ளைகள் எங்கு படிக்கிறார்கள்?” – ஜெகன்மோகன் ரெட்டி
அரசு பள்ளி மாணவர்களுக்கு ஆங்கில வழிக் கல்வி என்பதை எதிர்க்கும் அரசியல் பிரபலங்கள் தங்கள் வீட்டுப் பிள்ளைகள் எங்கு படிக்கிறார்கள் என்பதை விளக்க வேண்டும் என ஆந்திர முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி தெரிவித்திருக்கிறார்.
ஆந்திராவில் இனி அரசுப் பள்ளிகள் அனைத்தும் ஆங்கிலவழிப் பள்ளிகளாக படிப்படியாக மாற்றப்படும் என அண்மையில் அறிவித்தார். இதற்கு துணை குடியரசு தலைவர் வெங்கையா நாயுடு, முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு, பவன்கல்யாண் உள்ளிட்ட அரசியல் பிரபலங்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இந்நிலையில் நிகழ்வு ஒன்றில் பேசிய ஆந்திர முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி ஆங்கில வழிக் கல்வியை எதிர்ப்பவர்களின் வீட்டுப் பிள்ளைகள் எங்கு படித்தார்கள்? எங்கு படிக்கிறார்கள் என்பது பற்றி விளக்க வேண்டும் என கூறியிருக்கிறார்.
தற்போதுள்ள உலகத்தோடு போட்டியிட வேண்டும் என்றால் ஆங்கிலம் இல்லாமல் அது முடியாது என்றார். இதனை மனதில் வைத்து தான் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக ஜெகன்மோகன் ரெட்டி தெரிவித்திருக்கிறார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




