விமான நிலையத்தில் பயணிகளை உற்சாகப்படுத்திவரும் பன்றி

அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உள்ள விமான நிலையத்தில் உடை அணிவிக்கப்பட்டு அலங்கரிக்கப்பட்ட பன்றி ஒன்று பயணிகளை உற்சாகமூட்டி வருகிறது. பன்றிகள் விமானத்தில் பறப்பதற்கு அனுமதிக்கப்படுவதில்லை.

 

அதேவேளையில் அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள விமான நிலையத்தில் பன்றி ஒன்று பயணிகளை உற்சாகப்படுத்தி வருகிறது. அதன் உரிமையாளர் விதவிதமான உடை அணிவித்து விரல்களில் நகச் சாயம் பூசி அலங்காரம் செய்து விமான நிலையத்திற்கு அழைத்துச் செல்கிறார்.

 

விமான பயணம் மேற்கொள்ளும் பயணிகள் அதனுடன் இணைந்து செல்பி எடுத்து மகிழ்கின்றனர். இதனால் விமானத்தில் செல்லும் பயணிகள் மன அழுத்தம் குறைந்து உற்சாகம் அடைவதாக தெரிவிக்கிறார்கள்.


Leave a Reply