--- --:--:-- --

ரெப்போ வட்டி விகிதத்தை உயர்த்தியது ரிசர்வ் வங்கி..!

7

வங்கிகளின் குறுகிய கால கடன்களுக்கான ரெப்போ வட்டி விகிதத்தை ரிசர்வ் வங்கி உயர்த்தி உள்ளது.இந்திய ரிசர்வ் வங்கியின் அக்டோபர் மாதத்திற்கான நிதி கொள்கை கூட்டம் மும்பையில் நடைபெற்றது. ரிசர்வ் வங்கி ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா தலைமையில் அதிகாரிகள் நிதி கொள்கை கூட்டத்தில் நாட்டின் பொருளாதாம், ஈரான் போரால் ஏற்பட்டுள்ள தாக்கம், பணவீக்கம், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து ஆலோசனை நடத்தினர்.

 

இதைத்தொடர்ந்து, நிதி கொள்கை குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளை அறிவிப்பதற்காக ரிசர்வ் வங்கி ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா இன்று காலை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, ரெப்போ வட்டி விகிதத்தை 25 அடிப்படை புள்ளிகள் வரை உயர்த்துவதாக ரிசர்வ் வங்கி ஆளுநர் அறிவித்தார். இதன் மூலம் ரெப்போ வட்டி விகிதம் 5.50 சதவீதமாக ரிசர்வ் வங்கி நிர்ணயித்துள்ளது.

 

 

இந்த நிலையில், ரெப்போ வட்டி விகித உயர்வால் வீடு மற்றும் வாகன கடனுக்கான வட்டி விகிதம் அதிகரிக்க வாய்ப்புள்ளது என்று கூறப்படுகிறது. பிப்ரவரி 2023ஆம் ஆண்டுக்குப் பிறகு ரெப்போ வட்டி விகிதத்தை ரிசர்வ் வங்கி உயர்த்தியுள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon