மக்களின் ஆசீர்வாதத்தால் இவ்வளவு தூரம் உயர்ந்துள்ளேன்- டெல்லியில் பிரதமர் மோடி
சுதந்திர இந்திய வரலாற்றில், நாட்டின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேருவுக்குப் பிறகு, தொடர்ந்து மூன்று முறை பிரதமராகப் பதவியேற்ற இரண்டாவது தலைவர் நரேந்திர மோடி மட்டுமே ஆவார். குஜராத்தின் முதலமைச்சராக 13 ஆண்டுகளுக்கு மேலாக பதவி வகித்த இவர், 2014 ஆம் ஆண்டு நடந்த மக்களவை தேர்தலில் மகத்தான வெற்றி பெற்று நாட்டின் பிரதமர் ஆனார். பொது வாழ்க்கையில் அரசு பதவிக்கு வந்து 25 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில், டெல்லி விநாயகர் கோயிலில் பிரதமர் மோடி வழிபாடு நடத்தினார்.
இந்நிலையில், அரசு பதவிக்கு வந்து 25 ஆண்டுகள் நிறைவு செய்ததையொட்டி டெல்லியில் நடைபெற்று வரும் விழாவில் பிரதமர் மோடி பங்கேற்று பேசி வருகிறார். அப்போது அவர் பேசுகையில், “2001ல் குஜராத் முதல்வராகும்போது இந்த உயரத்துக்கு வருவேன் என நினைக்கவில்லை. நான் இன்னும் மாணவன் தான். கற்றுக்கொண்டே இருக்கிறேன். மக்களின் ஆசீர்வாதத்தால் இவ்வளவு தூரம் உயர்ந்துள்ளேன். ஒவ்வொரு வெற்றி, தோல்வியிலும் பாடம் கற்றுக்கொள்கிறேன்.
இன்னும் சிறப்பாக செயல்படுவது எப்படி என தோல்வி எனக்கு கற்றுக்கொடுக்கிறது. 25 ஆண்டுகள் தொடர்ந்து சேவையாற்ற வாய்ப்பு வழங்கிய மக்களுக்கு தலைவணங்குகிறேன். மக்களின் ஆசீர்வாதத்தால் இவ்வளவு தூரம் உயர்ந்துள்ளேன். பாஜக, என்டிஏ மற்றும் உடன் இருக்கும் அனைத்து அரசியல் தலைவர்களுக்கு நன்றி. 140 கோடி மக்களுக்காக இன்று விநாயகர் கோயிலுக்கு சென்று பிரார்த்தனை செய்தேன். எனக்காகவும் இறைவனிடம் வேண்டினேன். இன்னும் ஆற்றலுடனும், வலிமையுடனும் பணியாற்ற பிரார்த்தனை செய்தேன். இந்த நேரத்தில் இந்திய அரசியலமைப்புக்கும் மரியாதை செலுத்துகிறேன். உலகின் உற்பத்தி மையமாக இந்தியாவை மாற்றுவோம்.
2047ல் இந்தியாவை வல்லரசு நாடாக மாற்றுவோம். இந்தியாவை தன்னிறைவான நாடாக மாற்றுவோம். உலகளாவிய உற்பத்தி மையமாக இந்தியா மாறும். இந்தியாவின் விண்வெளி பயணங்கள் வியக்கத்தக்க சாதனை. விரைவில் ஒலிம்பிக் போட்டிகளை நடத்துவோம். இந்தியாவின் விண்வெளி பயணங்கள் வியக்கத்தக்க சாதனை. இது தனிப்பட்ட முறையில் பெருமை தேடும் நேரம் அல்ல. எனது இந்த பயணம் மக்களின் சாதனை. நாட்டு மக்களின் முன்பு நான் தலைவணங்குகிறேன். அனைத்து மக்களுக்குமான தீர்வுகளை கொடுக்க கொள்கைகளை வகுக்கிறோம். 2014 முதல் 2025 வரையிலான 10 ஆண்டுகளில் வேளாண் உற்பத்தியில் சாதித்துள்ளோம்.” என்று பேசினார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





