--- --:--:-- --

வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பு – சௌமியா அன்புமணி

13

திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்ற உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில், இந்த தீர்ப்பு ஒரு வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பு என்று பா.ம.க எம்.எல்.ஏ சௌமியா அன்புமணி கூறியுள்ளார்.

 

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் உள்ள தீபத் தூணியில் தீபம் ஏற்ற வேண்டும் என்று இந்த அமைப்பினிர் சட்டப்போராட்டம் நடத்தி வரும் நிலையில், திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற அனுமதி அளித்து சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை தீர்ப்பு அளித்தது. ஆனால் இந்த தீர்ப்பை எதிர்த்து, தமிழக அரசு மற்றும் தர்கா நிர்வாகம் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.

 

 

இந்த மனுக்களை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அரவிந்த் குமார் மற்றும் விபுல் எம்.பஞ்சோலி ஆகியோர் அடங்கிய அமர்வு இடைக்கால உத்தரவைப் பிறப்பித்தது. அதன்படி, வழக்கின் இறுதி விசாரணை நிலுவையில் உள்ளதால், வரும் நவம்பர் 24-ஆம் தேதி கார்த்திகை தீபத் திருநாளன்று மட்டும் ஒருமுறை ஏற்பாடாக தீபத்தூணில் தீபம் ஏற்ற அனுமதி அளிக்கப்படுகிறது. இது இந்த வழக்கம் குறித்த இறுதி அங்கீகாரம் அல்ல என நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது. மேலும், சென்னை உயர் நீதிமன்ற இரு நீதிபதிகள் அமர்வு கடந்த ஜனவரி 6-ஆம் தேதி வழங்கிய தீர்ப்பு மற்றும் அதன் கருத்துக்களுக்கு உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.

 

 

மேலும் தீபம் ஏற்றுவதற்கான கட்டுப்பாடுகளை விதித்துள்ள நீதிமன்றம், கோயில் தேவஸ்தான நிர்வாகத்தால் அங்கீகரிக்கப்பட்ட குறிப்பிட்ட நபர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் மட்டுமே மலை உச்சிக்குச் சென்று தீபம் ஏற்ற வேண்டும். இக்குழுவின் எண்ணிக்கையை மதுரை மாவட்ட ஆட்சியர், கோயில் செயல் அலுவலர், இந்திய தொல்லியல் துறை மற்றும் காவல் ஆணையருடன் ஆலோசித்து முடிவு செய்வார். தீபத்தூண் அமைந்துள்ள பகுதியில் பொதுமக்கள் கூடுவதற்கோ, ஊர்வலங்கள் மற்றும் ஆர்ப்பாட்டங்கள் நடத்துவதற்கோ முழுமையாகத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

 

 

தேவைப்பட்டால் மத்திய தொழிற்பாதுகாப்புப் படையினரையும் (CISF) பாதுகாப்புக்குப் பயன்படுத்திக்கொள்ள உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. அதேசமயம், வழக்கமான பாரம்பரிய இடங்களில் தீபம் ஏற்றுவதும், மலை மீதுள்ள சிக்கந்தர் பாதுஷா தர்கா மற்றும் மசூதிக்குச் சென்று வழிபடுவதும் எவ்வித இடையூறுமின்றித் தொடர வேண்டும் என உத்தரவிட்ட நீதிபதிகள், இந்த வழக்கின் விரிவான இறுதி விசாரணையை 2027-ஆம் ஆண்டு ஜனவரி இரண்டாவது வாரத்திற்கு ஒத்திவைத்தனர்.

 

 

இதனிடையே தீபத்தூணில் தீபம் ஏற்ற அனுமதி அளித்தது குறித்து தனது கருத்தை தெரிவித்துள்ள பா.ம.க. எம்.எல்.ஏ சௌமியா அன்புமணி, திருப்பராங்குன்றத்தில் தீபம் ஏற்றுவதை பற்றிய ஒரு வரலாற்று சிறப்பமிக்க ஒரு தீர்ப்பு அதுவும் இடைக்கால தீர்ப்பு என்றால் ஒரு வருடத்திற்கு கொடுத்திருக்கிறார்கள். இது பொதுமக்களின் பெரும்பான்மையான மனநிலையை பிரதிபலிக்கும் ஒரு தீர்ப்பு. எல்லாருமே இதை எதிர்பார்த்தார்கள்.

 

 

திருப்பரங்குன்றததில் எதிர்பார்த்தார்கள். மக்களுடைய மனநிலையை புரிந்து கொண்டு உச்சநீதிமன்றம் இந்த தீர்ப்பை அளித்திருக்கிறது. இந்த தீர்ப்பு அளித்தது ரொம்ப சந்தோஷம்தான். யாருக்கும் எந்த ஒரு பிரச்சினையும் இல்லாமல் ரொம்ப சந்தோஷமாக இந்த தீப திருவிழா நடக்க வேண்டும். அதுதான் நாம் கண்டிப்பாக கடை பிடிக்க வேண்டும் என்று சௌமியா அன்புமணி கூறியுள்ளார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon