--- --:--:-- --

திருப்பரங்குன்றம் தீபம் விவகாரம்: சீராய்வு மனு தாக்கல் செய்யப்படுமா? – அமைச்சர் நிர்மல்குமார்

1

திருப்பரங்குன்றம் தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்றுவது தொடர்பான விவகாரத்தில், சட்ட வல்லுநர்களுடன் ஆலோசித்து சீராய்வு மனு தாக்கல் செய்வது குறித்து இன்று மாலை அல்லது நாளை காலைக்குள் அறிவிக்கப்படும் என அமைச்சர் நிர்மல்குமார் தெரிவித்துள்ளார்.
திருப்பரங்குன்றம் தீபத்தூணில் வரும் 24-ஆம் தேதி கார்த்திகை தீபம் ஏற்ற உச்சநீதிமன்றம் முன்னதாக அனுமதி அளித்தது.

 

 

இதுதொடர்பான மனுவினை விசாரணை செய்த நீதிபதிகள் அரவிந்தகுமார், விபுல் பன்சோலி அமர்வு நேற்று இதற்கான உத்தரவினை பிறப்பித்துள்ளது. ஒருமுறை நடவடிக்கையாக இந்தாண்டிற்கு மட்டுமே இது பொருந்தும் என்றும் அந்த உத்தரவில் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. கார்த்திகை தீபத்தை திருப்பரங்குன்றம் தீபத்தூணில் ஏற்ற சென்னை உயர்நீதிமன்றம் வழங்கிய உத்தரவுக்கு இடைக்கால தடை விதிக்கப்படுவதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

 

இந்நிலையில், மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட வளர்ச்சித் திட்டப் பணிகள் குறித்த அனைத்துத் துறை அரசு அதிகாரிகளுடனான ஆய்வுக் கூட்டம் அமைச்சர் நிர்மல்குமார் தலைமையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் நிஷாந்த் கிருஷ்ணா, மாநகராட்சி ஆணையாளர் கௌரவ் குமார் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் தங்கபாண்டி, கார்த்திகேயன், கருப்பையா ஆகியோர் கலந்துகொண்டனர்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் நிர்மல்குமார், “திருப்பரங்குன்றம் தீபம் விவகாரம் தொடர்பாகச் சட்ட வல்லுநர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறோம். அடுத்தகட்டமாக என்ன நடவடிக்கை எடுக்கலாம் என்பதை விரைவில் அறிவிப்போம். சீராய்வு மனு தாக்கல் செய்வது தொடர்பாக இன்று மாலை அல்லது நாளை காலைக்குள் அதிகாரப்பூர்வமாகத் தெரிவிக்கப்படும்” என்றார்.

 

முன்னதாக, திருப்பரங்குன்றம் தீபம் விவகாரம் குறித்து மாவட்ட ஆட்சியரைச் சந்தித்துப் பேசுவதற்காக மதுரை மாவட்ட முஸ்லிம் ஐக்கிய ஜமாத் தலைவர் லியாகத் அலி உள்ளிட்ட இஸ்லாமிய அமைப்பினர் ஆட்சியர் அலுவலகத்திற்கு வருகை தந்தனர். அப்போது செய்தியாளர்களின் கேள்விக்குப் பதிலளித்த அவர்கள், இப்பிரச்சினையில் எவ்வித சிக்கலும் இல்லை என்றும், அனைத்தும் சமாதானமான முறையிலேயே செல்லும் என்றும் தெரிவித்தனர்.
இதற்கிடையே, மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்த மத நல்லிணக்க மக்கள் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளரும் வழக்கறிஞருமான வாஞ்சிநாதன், உச்ச நீதிமன்றத்தின் இடைக்கால உத்தரவு குறித்துத் தமிழ்நாடு அரசு இதுவரை எந்தக் கருத்தையும் தெரிவிக்காததைச் சுட்டிக்காட்டினார். காலம் காலமாக உள்ள மரபே பின்பற்றப்படும் என அரசு ஏற்கெனவே உறுதியளித்திருந்த நிலையில், இவ்விவகாரத்தில் அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டி முடிவெடுக்க வேண்டும் என்றும், தமிழ்நாடு அரசு உடனடியாகச் சீராய்வு மனு தாக்கல் செய்ய வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

 

 

 

 

யாக உள்ளதாகக் குறிப்பிட்ட அவர், “அது தீபத்தூண் என்பதற்கும், கோயிலுக்குச் சொந்தமான இடம் என்பதற்கும் தடை விதித்துள்ள உச்ச நீதிமன்றம், அதேநேரத்தில் அங்கு தீபம் ஏற்ற வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. அப்படியானால் அதனைத் தீபத்தூணாக எடுத்துக்கொள்வதா அல்லது சர்வே கல்லாக எடுத்துக்கொள்வதா என்பதை உச்ச நீதிமன்றமே தெளிவுபடுத்தவில்லை. ஆன்மிக மற்றும் சட்ட நிலைகளைக் கருத்தில் கொள்ளாமல் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது” என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், கடந்த 165 ஆண்டுகளாக மலை உச்சியில் தீபம் ஏற்றப்படவில்லை என்றும், உச்ச நீதிமன்றத் தீர்ப்பை அமல்படுத்தாவிட்டால் எதிர்மனுதாரர் ராமரவிக்குமாருக்கு எவ்வாறு இழப்பு ஏற்படும் என்றும் கேள்வி எழுப்பினார். “ஒவ்வொரு கோயிலுக்கும் தனித்தனி மரபு உள்ளது. அது தீபத்தூண் என்றே தெரியாத நிலையில் அர்ச்சகர்கள் எப்படி தீபம் ஏற்றுவார்கள்? மலை உச்சியில் தீபம் ஏற்றுமாறு கோயில் தேவஸ்தானத்திற்கு மாவட்ட ஆட்சியர் எவ்வாறு அறிவுறுத்த முடியும்? மேலும், தீபம் ஏற்றுவதைத் தவிர வேறு எந்தப் பணிகளையும் மேற்கொள்ளக் கூடாது எனக் கூறப்பட்டுள்ள நிலையில், கார்த்திகை தீபம் ஏற்றும்போது அந்தக் கல்லின் தன்மை மாறுவதற்கு வாய்ப்புள்ளது. தர்கா படியைப் பயன்படுத்தியே அந்தத் தூணுக்குச் செல்ல முடியும். இவ்வாறு உச்ச நீதிமன்ற உத்தரவில் பல குழப்பங்கள் உள்ளதால்தான் அரசு சீராய்வு மனு தாக்கல் செய்ய வேண்டும் என வலியுறுத்துகிறோம்” எனவும் தெரிவித்தார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon