--- --:--:-- --

6 வழிச் சாலையாக மாறும் செங்கல்பட்டு – திண்டிவனம் நெடுஞ்சாலை

5

சென்னை- கன்னியாகுமரி நெடுஞ்சாலை விரிவாக்கத் திட்டத்தின் ஒரு பகுதியாக, செங்கல்பட்டு- திண்டிவனம் இடையேயான 68 கி.மீ. தேசிய நெடுஞ்சாலைப் பகுதி, 6 வழிச்சாலையாக விரிவாக்கப்படவுள்ளது. இதற்கான கோப்புகளை தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (NHAI) ஒப்புதலுக்காக மத்திய அமைச்சரவைக்கு அனுப்பியுள்ளது.

 

 

பண்டிகை காலங்களில் சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு செல்லும் மக்கள் பலரும் கண்டிப்பாக போக்குவரத்து நெரிசலை சந்தித்திருப்பார்கள். குறிப்பாக சென்னையில் இருந்து பேருந்து வெளியில் வருவதற்கே கடுமையான போக்குவரத்து நெரிசலில் சிக்கி குறித்த நேரத்திற்கு வர முடியாமல் தாமதமாகத்தான் வரும் இந்த நிலை கடந்த பல ஆண்டுகளாக வழக்கமாக இருந்து வருகிறது. குறிப்பாக சென்னை – கன்னியாகுமரி ஜி.எஸ்.டி சாலையில் போக்குவரத்து நெரிசல் என்பது வழக்கத்தை விட பண்டிகை நாட்களில் அதிகமாக இருக்கும்.

 

 

இந்த போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் நெடுஞ்சாலைத்துறை சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில் தற்போது 4 வழிச் சாலையாக உள்ள சென்னை – கன்னியாகுமரி ஜி.எஸ்.டி. சாலை 4 வழிச்சாலையாக உள்ள இதனை 8 வழிச்சாலையாக மாற்ற தேசிய நெடுஞ்சாலை ஆணையம் திட்டமிட்டுள்ளது. சமீபத்தில் டெல்லி சென்ற தமிழக முதல்வர் விஜய், இந்த சாலையை 8 வழிச்சாலையாக மாற்ற வேண்டும் என்று மத்திய அரசிடம் கோரிக்கை விடுத்திருந்தார்.

 

 

இந்நிலையில், சென்னை – கன்னியாகுமரி சாலை விரிவாக்கத் திட்டத்தின் ஒரு பகுதியாக, செங்கல்பட்டு முதல் திண்டிவனம் வரையிலான 68 கி.மீ. தூரத்தை 6 வழிச்சாலையாக மாற்ற தேசிய நெடுஞ்சாலை ஆணையம் முடிவு செய்துள்ளது. இதற்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு ஏற்கனவே மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்துக்கு சுமார் ரூ.2,500 கோடி செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இதற்கான திட்ட அறிக்கையை தேசிய நெடுஞ்சாலை ஆணையத்திற்கு மத்திய அமைச்சரவை அனுப்பி வைத்துள்ள நிலையில், இதற்கு ஒப்புதல் விரைவில் கிடைக்கும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

 

 

செங்கல்பட்டு முதல் திண்டிவனம் வரை உள்ள பகுதியில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில், முதற்கட்டமாக இந்தப் பகுதியில் சாலை விரிவாக்கப் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. அதே சமயம், தற்போது ஜி.எஸ்.டி. சாலையில் நடைபெற்று வரும் மேம்பாலப் பணிகள் முடிக்கப்பட்ட பின்னரே 6 வழிச்சாலை விரிவாக்கப் பணிகள் தொடங்கப்படும் என தேசிய நெடுஞ்சாலை ஆணைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

 

செங்கல்பட்டு – திண்டிவனம் இடையிலான 6 வழிச்சாலைப் பணிகள் நிறைவடைந்த பிறகு, சென்னை – கன்னியாகுமரி சாலையின் மற்ற பகுதிகளிலும் விரிவாக்கப் பணிகள் படிப்படியாக மேற்கொள்ளப்பட உள்ளன. இதன் மூலம் முக்கிய வழித்தடத்தில் போக்குவரத்து நெரிசலை குறைக்க திட்டமிடப்பட்டுள்ளது. குறிப்பாக பண்டிகை தினங்களில் ஏற்படும் அதிகப்படியான போக்குவரத்து நெரிசலை குறைக்க இந்த சாலை விரிவாக்கம் பெரிய அளவில் கைக்கொடுக்கும்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon