மின்வாரிய ஊழியர்களுக்கு ஓய்வூதியப் பணிக்கொடை ரூ.25 லட்சமாக உயர்வு
தமிழ்நாடு மின்சார வாரிய ஊழியர்களுக்கான ஓய்வூதியம் மற்றும் இறப்புக்கான பணிக்கொடை உச்சவரம்பு ரூ.20 லட்சத்திலிருந்து ரூ.25 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளதாகத் தமிழ்நாடு மின் பகிர்மானக் கழகம் (TNPDCL) அறிவித்துள்ளது.
பழைய ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் வரும் தகுதியான ஊழியர்களுக்கு மட்டுமே இந்த அறிவிப்பு பொருந்தும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, கடந்த 01.01.2024 முதல் 20.11.2026 வரையிலான காலகட்டத்தில் ஓய்வு பெற்ற மற்றும் பணியின்போது உயிரிழந்த தகுதியான ஊழியர்களின் குடும்பத்தினருக்கு இந்த உயர்த்தப்பட்ட பணிக்கொடை வழங்கப்படும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது
📱 Share on WhatsApp 𝕏 Share on X




