திருப்பரங்குன்றம் தீபம் விவகாரத்தில் தமிழக அரசு நிலைபாடு என்ன? நிர்மல்குமார் பதில்
மதுரை திருப்பரங்குன்றம் மலையில் உள்ள தீபத்தூணில் நவம்பர் 24-ஆம் தேதி கார்த்திகை தீபம் ஏற்ற உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது குறித்து மாநில அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் கூறுகையில், “அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து சட்ட வல்லுநர்களுடன் ஆலோசித்து வருகிறோம்.
நிச்சயமாக ஒரு முடிவு எட்டப்பட்டவுடன் உங்களுக்குத் தெரிவிப்போம். எங்களுக்குச் சிறிது அவகாசம் தேவைப்படுகிறது. நேற்று மாலை தாமதமாகத்தான் எங்களுக்கு உத்தரவு நகல் கிடைத்தது. இது குறித்து நாங்கள் ஆலோசித்து வருகிறோம்…” என்றார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




