முக்கிய சாலைகளில் பறக்கும் படையினர் தீவிரம்!
மதுராந்தகம் தொகுதியில் பல்வேறு அரசியல் கட்சிகளின் முக்கிய தலைவர்கள் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வரும் நிலையில், கிராமங்களுக்குச் செல்லும் முக்கிய சாலைகளில் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனைகளில் ஈடுபட்டுள்ளனர். வாகனங்களில் கொண்டு செல்லப்படும் பொருட்கள் மற்றும் ரொக்கப் பணம் ஆகியவற்றுக்கு முறையாக ஆவணங்கள் உள்ளதா என்று அவர்கள் ஆய்வு செய்து வருகின்றனர்.
குறிப்பாக, மதுராந்தகம் – செய்யூர் பிரதான சாலை, அச்சிறுப்பாக்கம், மேல்மருவத்தூர் – சோத்துப்பாக்கம் மற்றும் கருங்குழி – திருக்கழுக்குன்றம் உட்பட பல்வேறு முக்கிய சாலைகளில் பறக்கும் படையினர் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




