அங்காள ஈஸ்வரி கோவில் விழா: ‘பூச்சட்டி’ ஏந்தி நேர்த்திக்கடன் செலுத்திய திருநங்கைகள்
மதுரை மதிச்சியம் பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு, திருநங்கை பக்தர்கள் திரளாகக் கலந்துகொண்டு பக்தியுடன் ‘பூச்சட்டி’ ஏந்தி நேர்த்திக்கடன் செலுத்தினர்.
ஆடித் திருவிழா விமரிசையாக நடைபெற்று வரும் நிலையில், வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட பூச்சட்டிகளைக் கைகளில் ஏந்தியவாறு ஊர்வலமாகச் சென்ற திருநங்கைகள், மேளதாளங்கள் முழங்க அம்மனுக்குத் தங்களது வழிபாட்டைச் செலுத்தி சிறப்புப் பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.



