--- --:--:-- --

கடைசியா ஒருவாட்டி அப்படி கூப்பிட்டுகிறேன் – கீர்த்தி சுரேஷ்

11

விரைவில் தமிழ்நாட்டின் முதலமைச்சர் ஆக பதவி ஏற்க போகும் நடிகர் விஜய்க்கு ரசிகர்கள் மற்றும் சினிமா நட்சத்திரங்கள் வாழ்த்து மழை பொழிந்து வருகிறார்கள். விஜய் உடன் சில படங்களில் நடித்து இருக்கும் கீர்த்தி சுரேஷ் அவருடன் நட்பாக இருந்து வருகிறார். விஜய் வெற்றி பெற்றதற்கு வாழ்த்து கூறி இருக்கும் கீர்த்தி, அவரை கடைசியாக ஒரு முறை ‘தளபதி’ என அழைப்பதாக கூறி இருக்கிறார்.

 

 

தளபதி “மக்கள் அன்பை மட்டும் பெற்று இந்த இடத்திற்கு வரவில்லை, வெறுப்பையும் சந்தித்து தான் வந்திருக்கீங்க. அவ்வளவு வெறுப்பை அவர்கள் காட்டிய போதும் நீங்கள் விட்டுக்கொடுக்கவில்லை.” “இது சுத்தமான கடின உழைப்பு, மக்கள் மீதான அர்ப்பணிப்பும் பேரார்வமும் தான். நான் முன்பே சொன்னது போல, நீங்க ஒரு எமோஷன், அதற்கு இந்த வெற்றி ஒரு சான்றாகும். இது ஒரு புது தொடக்கம்.”

 

“ஜோசப் விஜய் சார், இது கஷ்டப்பட்டு பெற்ற வெற்றி. நீங்கள் அதற்கு முற்றிலும் தகுதி ஆனவர். தளபதி (உங்களை கடைசியாக இப்படி ஒருமுறை அழைக்கிறேன். இனி வேறு விதமாக அழைக்க வேண்டும்)”. முதலமைச்சர் விஜய் என இனி அழைக்க வேண்டும் என்பதால் இப்படி கூறி இருக்கிறார் கீர்த்தி சுரேஷ்.

 

Leave a Reply

Right Menu Icon