கடைசி பட்ஜெட்டிலும் மக்களை ஏமாற்றிய திமுக: அண்ணாமலை கடும் விமர்சனம்
தமிழக அரசின் நடப்பாண்டு பட்ஜெட் குறித்து முன்னாள் பாஜக தலைவர் அண்ணாமலை தனது எக்ஸ் தளத்தில் கடும் கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார். கடந்த ஐந்து ஆண்டுகளாக மக்களை ஏமாற்றி வரும் திமுக அரசு, தனது கடைசி பட்ஜெட்டிலும் அதையே தொடர்வதாக அவர் விமர்சித்துள்ளார். தூய்மைப் பணியாளர்கள், ஆசிரியர்கள் மற்றும் அரசு மருத்துவர்களின் கோரிக்கைகள் முற்றிலுமாகப் புறக்கணிக்கப்பட்டுள்ளன.
கோவை மற்றும் மதுரை மெட்ரோ ரயில் திட்டங்களுக்கான திருத்தப்பட்ட அறிக்கையைத் தாக்கல் செய்யாமல் மத்திய அரசு மீது பழி போடுவதாகக் குறிப்பிட்டுள்ளார். வரும் 2027-க்குள் தமிழகத்தின் கடன் ரூ.10.62 லட்சம் கோடியாக உயரும் நிலையில், இந்த நிதி எங்கே சென்றது என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
அடிப்படை வசதிகள் இன்றி மாணவர்கள் மரத்தடியில் படிக்கும் அவலநிலை நீடிப்பதாகவும், மக்கள் நலனை விடப் பொய்களைப் பரப்புவதிலேயே அரசு குறியாக இருப்பதாகவும் அவர் சாடியுள்ளார்.





