--- --:--:-- --

இன்று வெளுக்கப் போகும் கனமழை..!

2

மிழ்நாட்டில் இன்று காலை 10 மணி வரை 23 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர், திருவண்ணாமலை, கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, சேலம், பெரம்பலூர், புதுக்கோட்டை, மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

 

அதேபோல், நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், அரியலூர், திண்டுக்கல், தூத்துக்குடி, நாமக்கல், ராமநாதபுரம், நீலகிரி மற்றும் கோவை மாவட்டங்களிலும் இன்று காலை 10 மணி வரை மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

 

இதற்கிடையே, தமிழ்நாட்டின் 9 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. அதன்படி, இன்று செங்கல்பட்டு, திருவண்ணாமலை, விழுப்புரம் ஆகிய மாவட்டங்களிலும், கள்ளக்குறிச்சி, சேலம், நாமக்கல் ஆகிய மாவட்டங்களிலும் கனமழை பெய்யக்கூடும். மேலும் கடலூர், தஞ்சாவூர் மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களிலும் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளது.

மேலும், சென்னை மற்றும் புறநகரில் இன்று இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Right Menu Icon