சி.பி.ஐ அலுவலகத்தில் விஜயிடம் கேட்கப்பட்ட கேள்விகள் என்ன ?
த.வெ.க. தலைவர் விஜய் கடந்த ஆண்டு செப்டம்பர் 27 ஆம் தேதி அன்று கரூரில் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியானார்கள். இந்த சம்பவம் நாடு முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த வழக்கை சுப்ரீம் கோர்ட்டு மேற்பார்வையில் சிபிஐ விசாரித்து வருகிறது.
கரூர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள அரசு சுற்றுலா மாளிகையில் சி.பி.ஐ. அதிகாரிகள் முகாமிட்டு புஸ்ஸி ஆனந்த், நிர்மல் குமார், ஆதவ் அர்ஜுனா, மதியழகன் உள்ளிட்ட நிர்வாகிகளிடம் கடந்த நவம்பர் மாதம் விசாரணை நடத்தினார்கள். இதைத்தொடர்ந்து டெல்லியில் உள்ள சி.பி.ஐ. தலைமை அலுவலகத்திலும் கடந்த மாதம் விசாரணை நடத்தப்பட்டது.
இதன் தொடர்ச்சியாக த.வெ.க தலைவர் விஜயையும் நேரில் அழைத்து விசாரிக்க சி.பி.ஐ முடிவு செய்து அவருக்கு சம்மன் அனுப்பியது. இந்நிலையில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும் நடிகருமான விஜய் இன்று (ஜனவரி 12) காலை சுமார் 11 மணியளவில் டெல்லியில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் ஆஜராகவுள்ளார்.
இதற்காக சென்னையில் உள்ள தனது வீட்டில் இருந்து கார் மூலம் விமான நிலையத்திற்கு புறப்பட்டு சென்றார். அங்கிருந்து 7 மணியளவில் தனி விமானம் மூலம் டெல்லி செல்கிறார். இவருடன் த.வெ.க நிர்வாகிகள் புஸ்ஸி ஆனந்த், சி.டி.ஆர்.நிர்மல் குமார், ஆதவ் அர்ஜுனா ஆகியோரும் செல்வதாக கூறப்படுகிறது.
விஜய் டெல்லி வருவதையொட்டி அவருடைய ரசிகர்களும், த.வெ.க நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பலரும் டெல்லிக்கு செல்ல முடிவு செய்து புறப்பட்டு விட்டனர். இதனால் சிபிஐ அலுவலகம் முன் மற்றும் விஜய் வரு பாதையில் பெரும் திரளும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனால் முன்னெச்சரிக்கையாக போதிய பாதுகாப்பு ஏற்பாடுகள் டெல்லி போலீசாரால் செய்யப்பட்டுள்ளன. த.வெ.க. 2-ம் கட்ட தலைவர்களிடம் டெல்லியில் சி.பி.ஐ. 3 நாள் விசாரணை நடத்தியது குறிப்பிடத்தக்கது. அதுபோல விஜய்யிடமும் நடத்தப்படலாம் என கூறப்படுகிறது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




