லக்னோ டி20 போட்டி ரத்தான விவகாரம்.. முக்கிய முடிவு எடுத்த பிசிசிஐ..!
இந்தியா – தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான 4 ஆவது டி20 போட்டி பனிமூட்டம் காரணமாக ரத்து செய்யப்பட்ட நிலையில் பிசிசிஐ முக்கிய முடிவு ஒன்றை எடுத்துள்ளது.இந்தியா சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென்னாப்பிரிக்கா அணி டி20 தொடரில் விளையாடி வருகிறது.
டெஸ்ட் தொடரை தென்னாப்பிரிக்கா கைப்பற்றிய நிலையில் ஒரு நாள் தொடரை இந்திய அணி வென்று பதிலடி கொடுத்தது. டி20 தொடரில் 2-1 என்ற கணக்கில் இந்தியா முன்னிலையில் இருக்கும்பட்சத்தில் 4 ஆவது டி20 லக்னோவில் நடைபெற இருந்தது. ஆனால் அதிக அளவிலான பனிமூட்டம் காரணமாக டாஸ் கூட போடாமல் போட்டி ரத்து செய்யப்பட்டது.
இந்நிலையில் பனிமூட்டம் காரணமாக இந்தியா தென்னாப்பிரிக்கா இடையேயான 4ஆவது இருபது ஓவர் போட்டி ரத்தான நிலையில் கால அட்டவணை தேர்வு செய்வதில் பிசிசிஐ முக்கிய முடிவு ஒன்றை எடுத்துள்ளது.
அதன்படி, சீதோஷ்ண நிலையை கருத்தில் கொண்டு இனிவரும் காலங்களில் டிசம்பர் 15 முதல் ஜனவரி 15 வரையிலான காலகட்டங்களில் எவ்வித போட்டிகளையும் வட இந்திய மாநிலங்களில் நடத்த வேண்டாம் என திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதற்குப் பதிலாக தென்னிந்திய பகுதிகள் அல்லது மேற்கு பகுதிகளில் போட்டிகளை நடத்தலாம் என யோசித்து வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




