--- --:--:-- --

தொடர் சரிவில் தங்கம் விலை..!

4

சேமிப்பின் அடையாளமாக திகழ்ந்து வரும் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1 லட்சத்தை எட்டி வருவதால் பொதுமக்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர். தீபாவளி பண்டிகைக்கு பிறகே தங்கம் விலை சற்று குறைய தொடங்கியது. அதன் தொடர்ச்சியாக கடந்த 5 நாட்களாக தங்கம் விலை தொடர் சரிவை சந்தித்து வருகிறது. இதனால் நகை பிரியர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

அதன் படி நேற்று (நவம்பர் 20) 22 காரட் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.100 உயர்ந்து ஒரு கிராம் ரூ.11,500க்கும் சவரனுக்கு ரூ.800 உயர்ந்து ஒரு சவரன் ரூ.92,000க்கும் விற்பனை செய்யப்பட்டது. தொடர்ந்து இன்றும் தங்கம் விலை அதிரடியாக குறைந்துள்ளது.

 

22 காரட் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.40 குறைந்து ஒரு கிராம் ரூ.11,460க்கும் சவரனுக்கு ரூ.320 குறைந்து ஒரு சவரன் ரூ.91,680க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதே போல 18 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.40 குறைந்து ஒரு கிராம் ரூ.9,560க்கும் சவரனுக்கு ரூ.320 குறைந்து ஒரு சவரன் ரூ.76,480க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலையும் அதிரடியாக கிராமுக்கு ரூ.4 குறைந்து ஒரு கிராம் ரூ.169க்கும், ஒரு கிலோ ரூ.1,69,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Right Menu Icon