--- --:--:-- --

கோவை அரசு மருத்துவமனையில் அட்டூழியம்; லஞ்சம் கேட்டு பிரசவத்துக்கு வந்த பெண்ணை தாக்கிய காவலாளிகள்

IMG_20191021_093238

கோவை அரசு மருத்துவமனை மகப்பேறு பிரிவில் லஞ்சம் பெறுவதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், குழந்தை பெற்ற பெண்ணை காவலாளிகள் தாக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

ஈரோடு மாவட்டம் சித்தோடு பகுதியைச் சேர்ந்த நாகு என்பவரது மனைவி பரமேஸ்வரி. பிரசவத்தின் போது அதிக ரத்தப்போக்கு ஏற்பட்டதால் கடந்த சனிக்கிழமை கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று சாதாரண வார்டுக்கு பரமேஸ்வரி மாற்றப்பட்டார். அப்போது கைக்குழந்தையுடன் நின்றிருந்த பரமேஸ்வரிக்கு உரிய படுக்கை வசதி தரப்படவில்லை என கூறப்படுகிறது .நீண்ட நேரமாக காத்திருந்த அவர், அவரது தாயார் செல்வியுடன் சேர்ந்து மருத்துவமனை ஊழியர்களிடம் தமக்கு உரிய வசதி செய்து தருமாறு கேட்டுள்ளார்.அப்போது செல்வி மற்றும் அவரது தாயாரை மருத்துவமனை காவலாளி தாக்கியதாக கூறப்படுகிறது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

 

தனது மகள் பரமேஸ்வரிக்கு படுக்கை வசதி செய்து தர காவலாளிகள் பணம் கேட்டு மிரட்டுவதாக அவரது தாய் குற்றம் சாட்டியுள்ளார். தமிழகத்தில் அரசு மருத்துவமனைகளில் தினமும் லட்சக்கணக்கானோர் நாடிச் செல்கின்றனர். இலவச சிகிச்சை, நிபுணத்துவம் பெற்ற மருத்துவர்கள் என்பதே அதற்கு காரணம். ஆனால் நோயாளிகளை ஊழியர்கள் பணம் கேட்டு மிரட்டுவதும் தாக்குதல் நடத்துவதும் பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon