--- --:--:-- --

வரவேற்பை பெறும் மகளிருக்கான தமிழக அரசின் திட்டம்..!

6

களிருக்காக தமிழக அரசு செயல்படுத்தி வரும் தோழி தங்கும் விடுதிகள் அமைக்கும் திட்டத்தை அரசு கூடுதலாக 26 இடங்களில் விரிவாக்கம் செய்ய முடிவு செய்துள்ளது. வேலை நிமித்தமாக நகரங்களை நோக்கி நகரும் பெண்களுக்கு பாதுகாப்பான தங்குமிடம் என்பது மிகவும் அவசியமானது.

 

இதனை கருத்தில் கொண்டு தமிழ்நாடு அரசின் சமூக நலன் மற்றும் மகளிர் மேம்பாட்டுத்துறை சார்பில், தமிழ்நாட்டில் 9 நகரங்களில் தோழி விடுதிகள் திறக்கப்பட்டுள்ளன. சென்னை, செங்கல்பட்டு, விழுப்புரம், பெரம்பலூர், சேலம், தஞ்சாவூர், திருச்சி, திருநெல்வேலி மாவட்டங்களில் நவீன வசதிகளுடன் இந்த ‘தோழி’ விடுதிகள் செயல்பட்டு வருகின்றன.
தமிழக அரசின் இந்த திட்டத்திற்கு பொதுமக்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்துள்ள நிலையில், அந்த திட்டம் கூடுதலாக 26 இடங்களில் செயல்படுத்தப்படும் என்று தமிழ்நாடு சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவன் தெரிவித்துள்ளார்.

 

இது தொடர்பாக அவர் அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது-
ஊட்​டச்சத்தை உறுதி செய் திட்​டத்​தின் கீழ் கடுமை​யான ஊட்​டச்​சத்து குறைபாடுடைய 75 ஆயிரம் குழந்​தைகள் கண்​டறியப்​பட்​டு, குழந்​தைகளின் தாய்மார்​களுக்கு ரூ.22 கோடி செலவில் ஊட்​டச்​சத்து பெட்​டகங்​கள் வழங்கப்பட்​டுள்​ளன. தமிழகத்​தில் மகளிருக்​கான 6 புதிய ‘தோழி’தங்​கும் விடு​தி​கள் அமைக்​கப்​பட்​டுள்​ளன.

 

இந்த திட்டத்திற்கு பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இந்த விடுதிகளுக்கான தேவையும் அதிகம் இருக்கிறது.
இந்த திட்டத்தின் கீழ் தூத்​துக்​குடி, திருநெல்​வேலி உள்​ளிட்ட இடங்​களில் உள்ள 10 தங்கும் விடு​தி​கள் சீரமைக்​கப்​பட்டு செயல்​பட்டு வரு​கின்​றன. இதுத​விர, ஆதி​தி​ரா​விடர் நலத்துறை​யில் இருந்து பெறப்பட்ட 3 மகளிர் தங்​கும் விடு​தி​களும் சீரமைக்​கப்​பட்டு செயல்​படு​கின்​றன.

 

பழங்குடியினப் பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம் தற்​போது மொத்​தம் 19 விடு​தி​கள் செயல்​பட்டு வரும் நிலை​யில், புதி​தாக 26 ‘தோழி’ தங்​கும் விடு​தி​கள் கட்டும் பணிகள் பல்​வேறு நிலைகளில் நடந்து வருகின்​றன என்று தெரிவித்துள்ளார்.

Right Menu Icon