--- --:--:-- --

நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளில் இன்று மாலையுடன் முடிகிறது பரப்புரை

7

நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி இடைத் தேர்தலுக்கான பரப்புரை இன்று மாலையுடன் நிறைவடைகிறது. நாங்குநேரி தொகுதி எம்எல்ஏவாக இருந்த வசந்தகுமார் நாடாளுமன்ற உறுப்பினராக இருப்பதால் விக்கிரவாண்டி தொகுதி திமுக எம்எல்ஏ ராதாமணி உடல் நலக்குறைவால் மரணம் அடைந்தாலும் இவ்விரண்டு சட்டமன்ற தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.

 

தொகுதிகளில் அதிமுக சார்பில் நாராயணன் காங்கிரஸ் சார்பில் ரூபி மனோகரன் நாம் தமிழர் கட்சி சார்பில் ராஜநாராயணன் ஆகியோர் போட்டியிடுகின்றனர். விக்கிரவாண்டியில் அதிமுக சார்பில் முத்தமிழ் செயல்படும் திமுக சார்பில் புகழையும் நாம் தமிழர் கட்சி சார்பில் கந்தசாமியும் களம் கண்டுள்ளனர். அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் வாக்கு சேகரித்து வருகின்றனர்.

 

இதேபோல் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சியான காங்கிரஸ் வேட்பாளர்களுக்கு ஆதரவாக ஸ்டாலின் உள்ளிட்டோர் பரப்புரையில் ஈடுபட்டு உள்ளனர். நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி தொகுதியில் இன்று மாலை 6 மணியுடன் பரப்புரை நிறைவடைகிறது. அதன்பிறகு அங்கிருந்து வெளியேற வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. இதேபோல புதுச்சேரி காமராஜ் நகர் தொகுதி இடைத் தேர்தல் பரப்புரை இன்று மாலையுடன் நிறைவடைகிறது மூன்று தொகுதிகளிலும் நாளை மறுநாள் தேர்தல் நடத்தப்பட்டு வரும் 24ஆம் தேதி முடிவுகள் அறிவிக்கப்படுகின்றன.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon