திருமணம் செய்து கொள்ள மறுத்த பெண்ணுக்கு சரமாரி வெட்டு

ஆந்திராவில் திருமணம் செய்து கொள்ள மறுத்த இளம்பெண்ணை இளைஞர் ஒருவரை சரமாரியாக தாக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டம் கவிதம் பகுதியைச் சேர்ந்தவர் சுதாகர் ஏற்கனவே திருமணமான இவர் தனியார் கல்லூரியை சேர்ந்த மாணவி ஒருவரை காதலித்து வந்துள்ளார். அவரது காதலை அந்த மாணவி ஆரம்பம் முதலே ஏற்கவில்லை என கூறப்படுகிறது.

ஆனாலும் தன்னை திருமணம் செய்து கொள்ள வேண்டுமென மாணவியை சுதாகர் தொடர்ந்து வற்புறுத்தி வந்துள்ளார். முதல் மனைவியை விவாகரத்து செய்துவிட்டு மாணவியை திருமணம் செய்துகொள்வதாக அவரிடம் சுதாகர் உறுதியளித்துள்ளார். அதற்கு மாணவி மறுக்க கத்தியால் அவரை சரமாரியாக தாக்கியுள்ளார் ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்த மாணவி சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.


Leave a Reply