ஜி.எஸ்.டி சீர்திருத்தத்தால் மாநிலங்களுக்கு ஏற்படும் வருவாய் இழப்பை ஈடு செய்யும் பிரச்சனை பற்றி சமீபத்தில் நடந்த ஜி.எஸ்.டிகவுன்சில் கூட்டத்தில் விவாதிக்கப்படவே இல்லை என தெலங்கானா மற்றும் கேரள மாநில நிதியமைச்சர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். மாநில அரசுகள் ஒன்றிய அரசை சார்ந்திருப்பதை ஜி.எஸ்.டி முறை கணிசமாக அதிகரித்துள்ளதாகவும் கூறியுள்ளனர்.