தமிழக அரசின் மினி பஸ் திட்டத்தை எதிர்த்த வழக்குகள் தள்ளுபடி
தமிழக அரசின் புதிய மினி பஸ் திட்டத்தை எதிர்த்து தாக்கல் செய்த வழக்குகளை தள்ளுபடி செய்தது சென்னை உயர்நீதிமன்றம். கிராமப்புறங்களில் சாலைகள் மோசமான நிலையில் உள்ளது.
கிராம மக்களுக்கு போக்குவரத்து வசதிகளை ஏற்படுத்தவே மினி பஸ் திட்டம். மினி பஸ் திட்டத்துக்கு மனுதாரர்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருவதை அனுமதிக்க முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
புதிய மினி பஸ் திட்டத்தால் ஏற்கனவே பஸ்கள் இயக்குபவர்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை எனவும் சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.






