தமிழக பாஜக தலைவர்களுக்கு அமித்ஷா எச்சரிக்கை..!
தமிழக பாஜகவில் நிலவும் உட்கட்சி பூசல்களை களைய வேண்டும் என மூத்த நிர்வாகிகளுக்கு அமித்ஷா உத்தரவிட்டுள்ளார். டெல்லியில் தமிழக பாஜக நிர்வாகிகளுடன் 2026 தேர்தல் தொடர்பாக அமித்ஷா ஆலோசித்தார்.
அப்போது தமிழக பாஜகவில் உட்கட்சி பூசல் நிலவுவது நல்லதல்ல என்றும், தேர்தலுக்கு முன் இதை சரிசெய்ய வேண்டும் எனவும் எச்சரித்துள்ளார். அண்ணாமலையை மாற்றியதில் இருந்து சலசலப்பு நீடித்து வருவது குறிப்பிடத்தக்கது.
📱 Share on WhatsApp
𝕏 Share on X





