புத்தகத்தை பார்த்து தேர்வு எழுதலாம்: CBSE புதிய முடிவு
மாணவர்களின் தேர்வு பயத்தைப் போக்கும் வகையில், புத்தகத்தைப் பார்த்து தேர்வு எழுதும் முறையை சிபிஎஸ்இ அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. வரும் 2026-27ஆம் கல்வி ஆண்டு முதல் 9 ஆம் வகுப்புக்கு, இந்த முறை அறிமுகம் செய்யப்பட உள்ளது.
மொழிப்பாடங்கள், கணிதம், அறிவியல், சமூக அறிவியல் பாடங்களுக்கான தேர்வுகளை மாணவர்கள் புத்தகத்தைப் பார்த்து எழுதலாம் என சிபிஎஸ்இ தெரிவித்துள்ளது.





