--- --:--:-- --

மேட்டூர்: 16 கண் மதகுகள் வழியாக நீர்திறப்பு நிறுத்தம்

5

டந்த 4 நாட்களாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து படிப்படியாக குறைந்து கொண்டே வருகிறது. நேற்று மேட்டூர் அணைக்கு வினாடிக்கு 20,500 கனஅடி வீதம் தண்ணீர் வந்துகொண்டிருந்தது. இரவில் வினாடிக்கு 16,500 கனஅடியாக குறைந்தது.

 

இதன் காரணமாக அணையில் இருந்து பாசனத்திற்கு திறக்கப்படும் தண்ணீரானது அணையையொட்டி அமைந்துள்ள நீர் மின் நிலையங்கள் வழியாகவே திறந்து விடப்பட்டு வருகிறது. இதனால் அணையின் உபரிநீர் போக்கியான 16 கண் மதகுகள் வழியாக தண்ணீர் திறப்பது ஒரு வாரத்திற்கு பிறகு நேற்று முதல் நிறுத்தப்பட்டது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon