16 வழித்தடங்களில் சேவையை நிறுத்திய ஏர் இந்தியா..!
அகமதாபாத்தில் நடந்த கோர விபத்துக்கு பிறகு ஏர் இந்தியாவின் விமானங்கள் பல ரத்து செய்யப்பட்டன. கடந்த 6 நாள்களில் மட்டும் 83 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
இந்நிலையில் ஏர் இந்தியா சர்வதேச சேவைகளை 15% குறைக்க முடிவு செய்துள்ளது. அதன்படி ஜூலை 15-ம் தேதி வரை 16 சர்வதேச வழித்தடங்களில் அதன் சேவையை ஏர் இந்தியா நிறுத்தியுள்ளது. பராமரிப்பு பணிகளுக்காக இந்த சேவை குறைப்பு தற்காலிமாக அமலாகியுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




