--- --:--:-- --

சீன அதிபரை புதுவிதமாக வரவேற்க காத்திருக்கும் சென்னை பள்ளி மாணவர்கள்

3

சென்னை வரும் சீன அதிபரை வரவேற்கும் வகையில் கொளத்தூரில் உள்ள தனியார் பள்ளி மாணவர்கள் அவரின் முகமூடி அணிந்து சீன மொழியில் அவரின் பெயரை எழுத்துக்கள் வடிவில் நின்றனர். பிரதமர் மோடி சீன அதிபர் ஜி ஜின்பிங் மாமல்லபுரத்தில் சந்திக்க உள்ள நிலையில் சீன அதிபர் நாளை சென்னை வருகிறார். அவரை வரவேற்க பல்வேறு விதமான சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதன் ஒரு பகுதியாக சென்னை கொளத்தூரில் உள்ள தனியார் பள்ளி சார்பில் சீன அதிபரை வரவேற்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

 

அதில் சுமார் 1.5 டன் அளவிலான பூக்களை கொண்டு வரவேற்பு வாசகங்கள் எழுதப்பட்டிருந்தன. ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் இந்திய-சீன கொடிகளை ஏந்தி பள்ளி மைதானத்தில் நின்றனர். மேலும் 1500 மாணவர்கள் சீன அதிபரின் முகமூடி அணிந்து சீன மொழியில் அவரின் பெயரை எழுத்துக்கள் வடிவில் நின்றனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon