--- --:--:-- --

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் பாகிஸ்தானுக்கு முக்கிய பொறுப்பு..!

5

‘ஆபரேஷன் சிந்துர்’ நடந்து முடிந்த சுமார் ஒரு மாதத்திற்குப் பின், இம்மாத தொடக்கத்தில் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் (UNSC) இரு முக்கிய துணை அமைப்புகளில் முக்கிய பொறுப்புகளைப் பாகிஸ்தான் பெற்றுள்ளது. 2025-26ம் ஆண்டுக்கான நிரந்தரமற்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பாகிஸ்தான், இந்த புதிய பதவிகளின் மூலம் சர்வதேச அரங்கில் தனது நிலையை வலுப்படுத்தியுள்ளது.

 

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் பாகிஸ்தான் தற்போது கீழ்க்கண்ட முக்கியப் பொறுப்புகளை ஏற்றுள்ளது: தலைவர், 1988 தலிபான் தடைகள் குழு (TSC): இந்த அமைப்பு 2011-ல் தனித்துவமான குழுவாக நிறுவப்பட்டது. துணைத் தலைவர், 1373 பயங்கரவாத எதிர்ப்பு குழு (CTC): இது பயங்கரவாதத்திற்கு எதிரான மிக முக்கியமான குழுவாகும். இணைத் தலைவர்: பாதுகாப்பு கவுன்சிலின் 2 Informal Working Groups இணைத் தலைவர் பொறுப்பையும் வகிக்கிறது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon