காரைக்காலில் பள்ளி, கல்லூரிகளுக்கு 4 நாள்கள் லீவு!
காரைக்காலில் உள்ள கைலாசநாதர் கோயில் மாங்கனி திருவிழாவையொட்டி அந்த மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு இன்றும், நாளையும் விடுமுறையாகும். பக்ரீத் பண்டிகை மற்றும் வார விடுமுறையான ஞாயிற்றுக்கிழமையோடு சேர்த்து தொடர்ந்து 4 நாள்கள் விடுமுறை என்பதால் மாணவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
5 மற்றும் 6-ம் தேதி உள்ளூர் விடுமுறையை ஈடுசெய்யும் விதமாக வரும் 14, 21-ம் தேதி வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.






