உயரமான ரயில்வே பாலம்.. நாளை திறக்கிறார் மோடி..!
உலகின் உயரமான ரயில்வே பாலத்தை PM மோடி நாளை திறந்து வைத்து நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார். ஜம்மு காஷ்மீரின் செனாப் நதியின் குறுக்கே உலகின் உயரமான ரயில்வே பாலம் கட்டி முடிக்கப்பட்டுள்ளது.
செனாப் பாலத்தை திறந்து வைக்கும் அவர், 2 வந்தே பாரத் ரயில்களையும் கொடியசைத்து தொடங்கி வைக்கிறார். அதன்பின் 46,000 கோடி மதிப்பிலான பல்வேறு நலத்திட்டங்களுக்கும் அவர் அடிக்கல் நாட்டவுள்ளார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




