ராணுவ வீரர்களின் அணி வகுப்பு போன்று அடுக்கி வைக்கப்பட்ட பொம்மைகள்
வடக்கு இங்கிலாந்தின் மான்செஸ்டரில் உள்ள ஷாப்பிங் சென்டரில் 40 ஆயிரம் ராணுவ வீரர்களின் உருவங்கள் பொம்மைகளாக வடிவமைக்கப்பட்டுள்ளது. கடந்த இருபது ஆண்டுகளில் மட்டும் 40,000 வீரர்கள் காயம் ஏற்பட்டு ராணுவத்தில் இருந்து விலகி உள்ளதாக ஒரு அமைப்பு ஆய்வறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தது.
இதையடுத்து அவர்களை நினைவு கூறும் விதமாகவும் போரில் உடல் பாகங்களை இழந்த ராணுவ வீரர்களின் வாழ்வாதாரத்தை அரசு அதிகம் கவனம் செலுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தியும் நாட்டின் தனியார் அமைப்புகள் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன.
அதன்படி வடக்கு இங்கிலாந்தின் மான்செஸ்டரில் உள்ள ஷாப்பிங் சென்டரில் போரில் காயம் ஏற்பட்டு ராணுவத்திலிருந்து விளக்கப்பட்ட பிரிட்டிஷ் வீரர்களின் தத்ரூப உருவங்களை போலவே 40,000 பொம்மைகள் வடிவமைக்கப்பட்டுள்ளன. அனைத்து பொம்மைகளும் ராணுவ அணிவகுப்பு போன்று அடுக்கிவைக்கப்பட்ட தோடு அணிவகுப்புக்கு தலைமை தாங்கும் மாதிரியாக ராணுவ வீரர்கள் வீட்டில் அமர்ந்திருக்கும் பொம்மைகளும் செயற்கை கால்களை பொருத்தி இருப்பதுபோன்ற பொம்மைகளும் நிறுவப்பட்டுள்ளன.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




